கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ரூ.3000 கோடி பட்ஜெட்: பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

ஹோம்பலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

Published On :

ஹோம்பலே பிலிம்ஸின் இணை நிறுவனர் விஜய் கிரகந்தூர் சமீபத்தில் சமூக ஊடகங்களில் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டார்.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா ஆகிய படங்கள் இந்திய அளவில் வெற்றிப்படங்களாக அமைந்தன.

கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் ஒட்டுமொத்த இந்திய சினிமா பார்வையாளர்களை ஈர்த்தது. இந்த இரண்டு படங்கள் மட்டும் ரூ.2000 கோடி வசூல் செய்து சானை படைத்தது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா படம் ரூ.400 கோடி வசூல் செய்தது.

ஹோம்பலே நிறுவனம் எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடி முதலீடு செய்து, பிரம்மாண்ட படங்களை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஹோம்பலே நிறுவனம், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா, பிரபாஸின் சலார், பகத் பாசலின் தூமம் போன்ற திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.