சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வரும் பிரியதர்ஷினி அந்த தொடரிலிருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர்களில் எதிர்நீச்சலும் ஒன்று. ஒளிபரப்பான சில மாதங்களிலேயே மக்கள் கொண்டாடும் அளவுக்கு அதிகபடியான ரசிகர் கூட்டம் அந்த தொடருக்கு உண்டு.
வாரத்தில் ஒளிபரப்பாகும் ஏதேனும் ஒரு காட்சி (எபிஸோட்) சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறும். இளைய தலைமுறையினர் பலரும் மீம்ஸ்களாக எதிர்நீச்சல் மாமனார் கதாபாத்திரத்தை பகிரத் தொடங்கினர்.

அந்த அளவுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் எதிர்நீச்சல் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடித்துவரும் பிரியதர்ஷினி, விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
எனினும், பிரியதர்ஷினி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சமூக வலைதலங்களில் பரவும் இந்த தகவலால் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எதிர்நீச்சல் தொடரிலிருந்து பிரியதர்ஷினி விலக வேண்டாம் என்றும், அவர் விலகினால், அவருக்கு இணையாக வேறு யாரையும் பொருத்திப்பார்க்க முடியாது என்றும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடரை திருச்செல்வம் இயக்குகிறார். ஸ்ரீவித்யா வசனம் எழுதுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட்! குறைந்தபட்ச ஓய்வூதியம் 7.5 மடங்கு உயர்வா?
டிரம்ப்பின் நீரிணை! ஹோர்முஸை பெயர்மாற்றம் செய்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட வரைபடம்!

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


