படகு விபத்தில் காயமடைந்த விஜய் ஆண்டனி: உடல்நிலை பற்றி பிரபல தயாரிப்பாளர் தகவல்
படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனியின் உடல்நிலை...


படப்பிடிப்பின்போது ஏற்பட்ட படகு விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனியின் உடல்நிலை குறித்து பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தகவல் அளித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் 2 படத்தில் தற்போது நடித்து வருகிறார். இயக்கமும் அவரே தான். மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பிரபல படத்தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், விஜய் ஆண்டனியில் உடல்நிலை பற்றி ட்விட்டரில் தெரிவித்ததாவது:
விபத்தினால் ஏற்பட்ட காயத்திலிருந்து விஜய் ஆண்டனி விரைவாக மீண்டு வருகிறார் என்கிற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். லங்காவியில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். அவருடைய குடும்பத்தினர் லங்காவி வந்து, அவருக்குத் துணையாக உள்ளார்கள். அவரை சென்னைக்கு அழைத்து வருவது பற்றிய முடிவை அவர்கள் எடுப்பார்கள். விஜய் ஆண்டனி விரைவில் குணமாகி வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்திப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...