மீண்டும் மோதும் அஜித் - விஜய்?
இந்த ஆண்டு மீண்டும் விஜய் - அஜித் படங்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்த ஆண்டு மீண்டும் விஜய் - அஜித் படங்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் துணிவும் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படமும் ஜன.11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனால், இருவரின் ரசிகர்களும் கொண்டாட்டத்துடன் பொங்கலை வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏகே 62-ஆன இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
இதையும் படிக்க: ரஜினியா? சூர்யாவா? அடுத்து யாரை இயக்குகிறார் ஞானவேல்!
அதேநேரம் நடிகர் விஜய்யும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு மீண்டும் அஜித் - விஜய் படங்கள் மோதிக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...