12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மாவீரன்: இன்று மாலை முக்கிய அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Published On :

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் - அதீதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்துக்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், மாவீரன் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று மாலை 6 மணிக்கும், மற்றொரு அறிவிப்பை 7 மணிக்கும் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.