மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இமயமலைக்குச் செல்கிறார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரப் பயணமாக இமயமலைக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :28 ஜூலை 2023, 12:31 pm

DIN

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் வில்லனாகவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏற்கெனவே, இப்படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் இணையத்தில் வைரலான நிலையில், ஹுக்கும் எனத் தொடங்கும் 2வது பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆதரவினை பெற்று வருகிறது. 

தற்போது, படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை துவங்கியுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஒரு வாரப் பயணமாக ஆக.6 ஆம் தேதி இமயமலைக்குச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2010 ஆம் ஆண்டு வரை தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின்போதும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த ரஜினி கடந்த  2 ஆண்டுகளாக உடல்நிலை காரணமாக நீண்ட பயணங்களைத் தவிர்த்து வந்தார். தற்போது, மீண்டும் இமயமலை செல்ல உள்ளார். 

இமயமலையில் ரஜினி - பழைய புகைப்படம்

இமயமலையில் ரஜினி - பழைய புகைப்படம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.