1000 பெண்களுடன் நடனமாடிய ஷாருக்கான்!
ஜவான் திரைப்படத்தின் அறிமுக பாடலில் நடிகர் ஷாருக்கான் 1000 பெண் நடனக்கலைஞர்களுடன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
இதையும் படிக்க | போர் தொழில் ஓடிடி வெளியீடு எப்போது?
இதன் முன்னோட்ட விடியோ வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், ஷாருக்கான் அறிமுகமாகும் ‘ஜிந்தா பந்தா..’ பாடலில் அவர் 1,000 பெண் நடனக் கலைஞர்களுடன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் நடனமாட சென்னை, ஹைதராபாத், மும்பை, தில்லி ஆகிய பகுதிகளிலிருந்து பெண்கள் அழைத்து வரப்பட்டதாகவும் 5 நாள்கள் படமாக்கப்பட்ட இப்பாடலுக்கு ரூ.15 கோடி செலவு செய்யப்பட்டதாகவும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...