யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் படத்தின் டீசர் வெளியானது.
ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் யோகிபாபு உடன் வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்
ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் வெளியிட்டுத் தேதி குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: கலாட்டாக்காரன் - கிங்க் ஆஃப் கோதா முதல் பாடல் வெளியீடு
இந்த நிலையில் லக்கி மேன் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.