தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதில் ரசிகர் ஒருவர், “ஜவான் படத்தின் டிரைலர் எப்போது? ஜவான் படத்திற்கு ஏன் விளம்பரம் செய்வதில்லை?” எனக் கேள்வி கேட்டப்படட்து. இதற்கு பதிலளித்த ஷாருக்கான், “ நீங்கள் ஜவான் பற்றி கேட்பதே படத்தின் விளம்பரம்தான்” எனப் பதிலளித்துள்ளார்.
மேலும் இன்று மாலை ஜவான் படத்தினை அட்லியுடன் பார்க்கப்போவதாக கூறியுள்ளார். எனவே படப்பிடிப்பு முடிந்திருக்குமென ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









