/

டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:48 am

DIN


நடிகர் ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

Story image

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.