எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அதிநவீன கேமராவில் ‘லியோ’ படப்பிடிப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :7 மார்ச் 2023, 10:31 am

DIN

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யுவ் தாமஸ், கெளதம் வாசுதேவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது, படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ரெட் கேமரா வகைகளில் அதிநவீன கேமராவான ‘வி ராப்டார் எக்ஸ் எல்’ பயன்படுத்தப்பட்டு வருகிறது. காஷ்மீரில் நிலவும் கடும் பனி காரணமாக காட்சிகளை துல்லியமாக எடுக்க இந்தக் கேமராவை படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹன்சா தேர்ந்தெடுந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரெட் கேமராவின் பெரியப்பா வந்துவிட்டார்’ என மகிழ்ச்சியாக விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மனோஜ் பரமஹன்சா பீஸ்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். குறிப்பாக, அரபிக் குத்து பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதத்திற்காக பல பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.