/

தனது மகன் பெயரை அறிவித்தார் அட்லி!

இயக்குநர் அட்லி தனது மகன் பெயரை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:26 pm IST

இயக்குநர் அட்லி தனது மகன் பெயரை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பிரபல இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். 2013-ல் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லி, அதன்பிறகு தெறி, மெர்சல், பிகில் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கினார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பான் இந்தியா திரைப்படமாக ‘விஜய் 67’ வெளியாகவுள்ளது. அதன்பின், விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் ‘விஜய் 68’ மிகப்பிரம்மாண்டமாக உருவாகவாக இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி தற்போது ஷாருக் கான் நடிப்பில் ஜவான் என்கிற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயந்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகார்வபூர்வமாக அறித்தது.

இந்த நிலையில், இந்த வருடம் அட்லி -  பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அட்லி -  பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளனர்.

பிரியா மற்றும் அட்லி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஆம். குழந்தையின் பெயர் 'மீர்'. எங்களது குழந்தையின் பெயரை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.