புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காதலியை கரம் பிடிக்கும் சுந்தரி சீரியல் நடிகர்!

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கும், திருமகள் தொடரில் நடித்த ஹரிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

News image

சுந்தரி தொடரில் அரவிஷ்.

Updated On :15 நவம்பர் 2023, 11:16 am

DIN

சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கும், திருமகள் தொடரில் நடித்த ஹரிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அரவிஷ். இவர் சுந்தரி தொடரின் முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவரான அரவிஷ், இலக்கியா தொடரிலும் நடித்து வருகிறார்.

அரவிஷ் மற்றும் ஹரிகா.

அரவிஷ் மற்றும் ஹரிகா.

அதேபோல், சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஹரிகா. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நவ.19 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

Story image

இணைந்து நடிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் திருமணம் செய்துகொள்வது இயல்பாகி விட்ட நிலையில், மதன் - ரேஷ்மா ஆரியன் - ஹபானா, சித்து - ஸ்ரேயா, சஞ்சீவ் - ஆல்யா மானசா போன்ற பிரபலங்களின் பட்டியலில் இவர்களும் தற்போது இணைந்துள்ளனர்.

தற்போது, இந்த தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.