இன்றைய நிகழ்ச்சிக்கான வெளியான ப்ரோமோவில் விஷ்ணுவுக்கும், தினேஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஐஷு வெயேற்றப்பட்டார். இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரங்களை போல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் பிரிக்கப்படாமல் இந்த வாரம் ஒரே பிக் பாஸ் வீடாக உள்ளது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவும், தினேஷும் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியான நிலையில், இரண்டாவது ப்ரோமோவிலும் இருவரும் அவேசமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், விஷ்ணுவை பார்த்து தினேஷ், ப்ரோமோ பொறுக்கி என்று கூறுகிறார். அதற்கு ஆத்திரமடையும் விஷ்ணு, காலால் அருகில் இருந்த பொருளை உதைக்கிறார். இந்த சண்டையை சக போட்டியாளர்கள் விலக்க முயற்சி செய்வதாக காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.
இந்த சண்டை உண்மையா அல்லது சீக்ரெட் டாஸ்க் ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.
இதையும் படிக்க: கிரிக்கெட் கதையை இயக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!
எப்படியிருந்தாலும் இன்றைய ப்ரோமோ விடியோவை பார்க்கும்போது இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழப்பு

36 உத்தரமேரூா்

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,200 கனஅடியாக சரிவு
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


