திரைப்படமாகும் எலான் மஸ்க் வாழ்க்கை!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படமாகும் எலான் மஸ்க் வாழ்க்கை!
Updated on
1 min read

டெஸ்லா நிறுவனரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர்.

தென்னாப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான், தன் அசாத்திய மூளைத் திறனால் தொழில்நுட்ப வல்லுநராக வெற்றியைப் பெற்றார். டெஸ்லா என்கிற நிறுவனத்தை துவங்கி தானியங்கி கார்களை உற்பத்தி செய்து கவனத்தைப் பெற்றவர். மேலும், விண்வெளி தொடர்பான ஆய்வுகளையும் இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. 

சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி எக்ஸ் எனப் பெயரை மாற்றி நிர்வகித்து வருபவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க பணிகள் துவங்கியுள்ளன.

ஏ24 என்கிற நிறுவனத்தின் தயாரிப்பில் பிளாக் ஸ்வான், தி வேல் போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய டாரன் ஆர் நோப்ஸ்கி இப்படத்தை இயக்குகிறார். 

தன் வாழ்க்கையில் எலான் கடந்த வந்த பிரச்னைகள், தோல்விகள், வெற்றிகள், உறவுச் சிக்கல்கள் என பலருக்கும் தெரியாத அவரின் வாழ்க்கை, இப்படத்தில் தெரியப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com