
வானத்தைப்போல தொடர் நடிகருக்கும், ஒப்பனை கலைஞர் காயத்ரிக்கும் நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் வானத்தைப் போல தொடர் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தொடரில் ராஜாபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அஸ்வின் கார்த்தி. இவர் பிரியமானவள், குல தெய்வம், கல்யாணம் முதல் காதல் வரை, அரண்மனை கிளி போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர்.
அஸ்வின் கார்த்தி நீண்டகாலமாக ஒப்பனை கலைஞர் காயத்ரி எனபவரை காதலித்து வந்தார். இவர்களின் புகைப்படங்கள் முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இவர்களுக்கு செப்.17 ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்த நிலையில், நேற்று இரு வீட்டார்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
இதையும் படிக்க: சந்தானத்தின் 80ஸ் பில்டப்: வெளியானது புதிய பாடல்!
இது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அஸ்வின் கார்த்தி - காயத்ரி ஜோடிக்கு ரசிகர்கள் அவர்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.