மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மகேஷ் பாபுவின் டெவில்: அனிமல் பட புரமோஷனில் ரகசியம் பகிர்ந்த இயக்குநர்! 

அனிமல் பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா, பிரபல நடிகர் மகேஷ் பாபுவிடம் கதை சொல்லியிருப்பதாக கூறியுள்ளார். 

News image
Updated On :27 நவம்பர் 2023, 12:44 pm

அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.  

இந்த இயக்குநரின் அனிமல் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

பிரபல சன்னி தியோலின் சகோதரான பாபி தியோல் படத்தின் வில்லனாக நடித்துள்ளார். சூர்யாவின் கங்குவா படத்திலும் பாபி தியோல் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Story image

ஹைதராபாத்தில் இன்று நடந்த புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநரிடம் மகேஷ் பாபு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சந்தீப் ரெட்டி வங்கா, “நான் முதலில் மகேஷ் பாபுவிடம் ஒரு கதை கூறினேன். அதற்கு டெவில் என்று பெயர். அதில்  அனிமல் படத்தினைவிட வன்முறை அதிகம் இருக்கும். ஆனால் அந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் அவருக்கு பிடிக்காததால் அது நடைபெறவில்லை” எனக் கூறினார்.  

இதனனால் சமூக வலைதளங்களில் டெவில் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.