
தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆமிர் கானின் புதிய படம் அறிவிப்பு!
மாளவிகா மோகனன் ட்விட்டரில் (எக்ஸ்) ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
உங்களுக்கு பிடித்த தமிழ்ப்படம்? - கடந்த வருடம் பார்த்த திருச்சிற்றம்பலம் படம் மிகவும் பிடித்திருந்தது.
மாஸ்டர் தவிர்த்து நடிகர் விஜய் படங்களில் பிடித்த படம் எது?- தெறி.
இதையும் படிக்க: நட்பே துணை: விராட் கோலியின் பேட்டினால் சதம் விளாசிய ஸ்மித்!
தங்கலான் ரிலீஸ் எப்போது?- இந்தக் கேள்வியை இயக்குநர் பா. ரஞ்சித்திடம் கேட்க வேண்டும்.
பிடித்த புத்தகம் எது?- கேரளத்தின் வரலாற்று நூலான ‘தி ஐவரி த்ரோன்’ என்ற புத்தகம் மிகவும் படிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.