
மணலில் புதைந்த தமன்னாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். சமீபத்தில் போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளியாகின.
காவாலா பாடல் மூலம் டிரெண்டான தமன்னா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில், நேர்காணல் ஒன்றில் அதை உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், மணலில் முழு உடலும் புதைந்தவாறு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிக்க: அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி!
இந்த புகைப்படத்துக்கு தமன்னா ரசிகர்கள், இது ஒருவகையான தியானம் என்றும், இதனால் மனம் மற்றும் உடல் இலகுவாகும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.