லியோ சிறப்புக் காட்சி: அரசு விதித்த புதிய கட்டுப்பாடு!

லியோ சிறப்புக் காட்சி: அரசு விதித்த புதிய கட்டுப்பாடு!

அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதிகாலைமுதலே லியோ சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும் எனக் கூறப்பட்டுவந்த நிலையில், தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, லியோ சிறப்புக் காட்சி காலை 9 மணிமுதல்தான் தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறுதிக் காட்சி நள்ளிரவு 1.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 19ஆம் தேதிமுதல் 6 நாள்களுக்கு லியோ படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படவுள்ள நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

திரையரங்குகளில் 6 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்றும், அரசு விதிமுறைகளின்படி ரசிகர்களுக்கு உரிய பாதுகாப்பு, வாகன நிறுத்த வசதி உள்ளிட்டவை செய்துதர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சிறப்புக்காட்சி: சிறப்புக் குழு அமைப்பு

லியோ படத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில் விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்கச் சிறப்புக் குழு அமைக்க அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க சிறப்புக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை அஜித்தின் துணிவு படத்துக்கான அதிகாலைக் காட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பெரிய நாயகர்களின் படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.

லியோ படக்குழு வைத்த கோரிக்கை

லியோ படத்துக்கு அக்டோபர் 19-ம் தேதி மட்டும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். 20-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை அதிகாலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com