தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஹாலிவுட் படம், தமிழ்ப் படம் எப்போது?: ஸ்ருதி ஹாசன் பேட்டி! 

நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். 

News image
Updated On :16 அக்டோபர் 2023, 3:50 pm

DIN

கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் பாடகர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவர். அஜித், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடத்து வருகிறார். 

Story image

நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 

ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ள ஸ்ருதி ஹாசன் கோவையில் துணிக்கடை திறப்பு விழாவில் பங்கேற்று பேசியதாவது: 

Story image

எனக்கு மார்டன் உடை அல்லது கருப்பு நிற ஆடை உடுத்துவதில்தான் விருப்பம். ஆனால் புடவை உடுத்தும்போது நேர்மறையான (பாசிடிவ்) உணர்வு ஏற்படுகிறது. உலகத்திலேயே புடவைதான் அழகான உடை. நான் தமிழ்ப்பெண்; விரைவில் தமிழ்ப்படம் எடுப்பேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். 

Story image

அப்பாவை இயக்க மாட்டேன். அந்தளவுக்கு எனக்கு திறமை இல்லை. அவருடன் போட்டிபோட யாராலும் முடியாது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். என்னுடைய வெற்றியில் திருப்தியடைகிறேன். 

ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளேன். பெண்களே எழுதி இயக்கிய படம் என்பதால் கூடுதல் சிறப்பாக இருக்கும். சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட உள்ளது. தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.