/

கேம் சேஞ்சர்: முதல் பாடல் எப்போது?

இயக்குநர் ஷங்கர் இயக்கியுள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:10 am

DIN

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

Story image

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

Story image

இந்தப் படத்தில் புதிதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஷங்கருடன் இணைந்து எழுதியுள்ளார் எனவும் தகவல் வெளியானது. 

Story image

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் தசராவை முன்னிட்டு அக்.22 அல்லது அக்.23 அன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.