ரெய்டு படத்தின் முக்கிய அறிவிப்பு!

ரெய்டு படத்தின் முக்கிய அறிவிப்பு!

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தின் புதிய பாடல் நாளை வெளியாகிறது.
Published on

விக்ரம் பிரபு நடிப்பில், இயக்குநர் முத்தையா வசனத்தில் உருவாகியுள்ள 'ரெய்டு' திரைப்படத்தின் புதிய பாடல் நாளை(அக்.24) வெளியாகிறது.

சமீபத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது. தற்போது விக்ரம் பிரபு ‘ரெய்டு’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. 

'ரெய்டு' திரைப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கார்த்தி இயக்கி இருக்க, எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே மணிகண்ணன் ஆகியோர் தயாரித்து இருக்கின்றனர்.

ஸ்ரீதிவ்யா நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தில் அனந்திகா, ரிஷி ரித்விக், சௌந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதிரவன் ஒளிப்பதிவும், மணிமாறன் படத்தொகுப்பும், கே.கணேஷ் ஆக்‌ஷன் காட்சிகளையும் கவனித்திருக்க, இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ரெய்டு திரைப்படத்தின் புதிய பாடலான அழகு செல்லம் பாடல் நாளை(அக்.24) வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com