/

ராம்சரண்- ஷங்கர் படத்தின் புதிய அப்டேட்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:12 am

DIN

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

இயக்குநர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். 

இந்தியன் 2 படத்தின் சமீபத்திய படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் ராம் சரண் படத்தில் கவனம் செலுத்துகிறார். 

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக தமன் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.