’ஜோசப்’, ‘ஒன்’, ‘நயாட்டு’, ‘ஜகமே தந்திரம்’ போன்ற படங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோஜு ஜார்ஜ் மலையாளத்தில் முக்கியமான நடிகர். சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ‘இரட்ட’ படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில், இவர் நடித்த 'புலிமட, ‘ஆண்டனி’ ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.
இந்நிலையில், ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இதற்கான, அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ரசிகர்களால் லோகேஷ் கனகராஜ் காயம்!
இப்படத்தில் ஜோஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அபிநயா, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம் உள்ளிடோரும் நடிக்கின்றனர். ஜோஜுவின் அப்பு பாத்து பப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஏடி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
நடிகராக அங்கீகாரம் பெற்ற ஜோஜு ஜார்ஜ், இயக்குநராகவும் தனக்கான இடத்தைப் பிடிப்பார் என்கிற நம்பிக்கையில் உள்ளனர் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! 24,000- க்குக் கீழ் நிஃப்டி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

மெல்ல உயரும் தங்கம்: வெள்ளி?
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா!
கேரளத்தில் அமைச்சர் புறக்கணிப்பு: பிரதமரின் அரசு நிகழ்ச்சியைப் புறக்கணிக்க பினராயி விஜயன் முடிவு
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

