10 படங்கள்.. ரூ.2,200 கோடி வசூல்.. அசத்திய தமிழ் சினிமா!

இந்தாண்டில் வெளியான தமிழ்ப் படங்கள் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளன.
10 படங்கள்.. ரூ.2,200 கோடி வசூல்.. அசத்திய தமிழ் சினிமா!

இந்தியவில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திரைப்படங்களின் வசூல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன. நல்ல ஆக்கங்களுக்கு உலகளவில் வரவேற்பும் கிடைக்கின்றன. 

முக்கியமாக, இந்திய உச்சநட்சத்திரங்கள் ரூ.1,000 கோடி வசூலை அடைந்து அசத்தியுள்ளனர்.

இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ்ப் படங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளன. குறிப்பாக, இந்தாண்டு துவக்கத்தில் வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் ரூ.300 கோடியும் அஜித்தின் 'துணிவு' படம் ரூ.200 கோடியும் வசூலித்தன. தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொன்னியின் செல்வன் - 2 ரூ.400 கோடி வரை வசூல் ஈட்டியது. அதன்பின், ஜெய்லர் ரூ.600 கோடியையும் தற்போது வரை விஜய்யின் லியோ ரூ.400 கோடியும் வசூலித்துள்ளதால் தென்னிந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் கொண்ட சினிமா துறையாக தமிழ் சினிமா உருமாறியுள்ளது.

மேலும், தனுஷின் வாத்தி, விஷாலில் மார்க் ஆண்டனி ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தன. சிவகார்த்திகேயனின் மாவீரன் ரூ.85 கோடியும் உதயநிதியின் மாமன்னன் ரூ.50 கோடியும் வசூலித்து வெற்றிப்படங்களாக அமைந்தன.

சிறிய பட்ஜெட்டில் தயாரான சித்தார்த்தின் சித்தா திரைப்படமும் உலகளவில் ரூ.30 கோடி வசூலித்து அசத்தியது. இதனால், இந்தாண்டில் இதுவரை இந்த 10 தமிழ்ப் படங்கள் இணைந்து ரூ.2250 கோடிக்கு மேல் வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் தனுஷின் கேப்டன் மில்லர், ஜிகர்தண்டா - 2 உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளதால் இந்த தொகையின் எண்ணிக்கை அதிகரிக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com