நடிகைகள் பலரும் இளைப்பாறுதலுக்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களை நோக்கி சுற்றுலா செல்ல, நடிகை அனுஷா மட்டும் மதுரைக்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளார்.
மதுரை மக்களின் அன்பும் மரியாதையையும் கண்டு வியப்பதாக நடிகை அனுஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிகை அனுஷா நடித்து வருகிறார். இவர் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்.
கன்னட மொழி தொலைக்காட்சித் தொடரான ராதா ரமணாவில் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ஆனந்த ராகம் தொடரில் நடித்து வருகிறார்.
நடிகையாக இருந்தாலும் பண்பாட்டு பாரம்பரியங்களை கடைபிடிப்பவராகவே அனுஷா இருந்து வருகிறார். அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவும் படங்களும் அது தொடர்பாகவே இருக்கும்.
இந்நிலையில் மதுரைக்கு அவர் தனியாக பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்த அனுஷா, அங்கு மக்களோடு மக்களாக கடைவீதிகளில் தனது நாளைக் கழித்துள்ளார். பின்னர் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று தரிசித்ததை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

மதுரையில் கிடைக்கும் பாரம்பரிய உணவுகளையும் தனது விடியோவில் குறிப்பிட்டு மதுரை மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, தனிமையாக பயணம் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவமும் பாடங்களும் மிகவும் வியப்புக்குரியது. வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்காக வாழுங்கள். ஒரே ஒருவாழ்க்கைதான். எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரள அரசின் அடுத்த தலைமைச் செயலராக விஸ்வநாத் சின்ஹா நியமனம்!

மதிய உணவுத் திட்டத்தில் முட்டை நீக்கம்! மாணவர்கள் அதிர்ச்சி! எங்கே?

நடிகர் மனோகர் மகன் திருமணம்! ஒன்றாகப் பங்கேற்ற ஈரமான ரோஜாவே குழுவினர்!

உயிருள்ள சிலை... உலகக் கோப்பையில் பங்கேற்ற காங்கோ ரசிகர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



