முதல்நாளே அர்ச்சனாவை அழவைத்த போட்டியாளர்கள்: பிக் பாஸில் பரபரப்பு!

வந்த முதல்நாளே அர்ச்சனாவை போட்டியாளர்கள் அழவைத்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்நாளே அர்ச்சனாவை அழவைத்த போட்டியாளர்கள்: பிக் பாஸில் பரபரப்பு!
Updated on
1 min read

வந்த முதல்நாளே அர்ச்சனாவை போட்டியாளர்கள் அழவைத்துள்ளதால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டில் 5 பேர் செல்லவுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். அதன்படி, இந்த வார இறுதி நாள் நிகழ்ச்சியில் வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இதனிடையே முதல் வார எவிக்‌ஷனில் அனன்யாவும், இரண்டாவது வாரத் தொடக்கத்தில் உடல்நிலை சரியில்லாததால் பவா செல்லதுரையும், மூன்றாவது வாரம் விஜய் வர்மாவும், இந்த வாரம் வினுஷா மற்றும் யுகேந்தரனும்  வெளியேறியுள்ளனர்.

இந்த வார கேப்டனாக தேர்வான பூர்ணிமா, வைல்டுகார்டு போட்டியாளர்கள் 5 பேர் மற்றும் விசித்ராவை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 

இந்த நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் மாயா கிருஷ்ணன் மற்றும் அர்ச்சனாவுக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் அர்ச்சனா பேதும் போது, "எதிரியாக இருந்தாலும் 5 நிமிடமாவது சிரித்து பேச வேண்டும்" என்று தெரிவிக்கிறார்

அதற்கு மாயா, "அதெல்லாம் இங்கு கிடைக்காது" என கடுமையாக பேசுகிறார். உடனே அர்ச்சனாவை சமாதானம் செய்ய மாயா அவரை கட்டிப்பிடிக்க செல்ல, அதற்கு அர்ச்சனா, என்னிடம் "அவமரியாதையாக நடந்து கொண்டவரை நான் கட்டிப்பிடிக்க மாட்டேன்" என அழுதபடி கூறுகிறார்.

இதற்கு, அர்ச்சனா ரசிகர்கள் வந்த முதல்நாளே அழவச்சுட்டீங்களே என்று விமரிசனம் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com