12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜவான் பிளாக்பஸ்டர் சினிமா.. மகேஷ் பாபு பாராட்டு!

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.

Published On :

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இப்படம் உலகளவில் முதல்நாளில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதனால், இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல்நாள் வசூலில் இவ்வளவு பெரிய தொகையை வசூலித்த படமாக உருமாறியுள்ளது.

ஜவான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே ரூ.40 கோடியைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நடிகர் மகேஷ் பாபு, “ஜவான் பிளாக்பஸ்டர் சினிமா. அட்லி, ராஜாவை வைத்தே ராஜ தரத்திலான எண்டர்டெயின்மெண்ட் படத்தை எடுத்துவிட்டார். அவர் சினிமா வாழ்வின் சிறந்த படம். ஷாருக்கானின் திரை ஆளுமையையும் கவர்ச்சியையும் யாருடனும் ஒப்பிடமுடியாது. ஷாருக்கானின் முந்தைய சாதனைகளை(பதான்)  ஜவான் முறியடிக்கும்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.