தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை!

சூரி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது.

Published On :

சூரி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது.

‘ஆனந்தம்’, ‘ரன்’, 'சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் லிங்குசாமி. அடுத்தடுத்து இவர் இயக்கிய, ‘வேட்டை’, ‘அஞ்சான்’, ‘சண்டைக்கோழி - 2’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்குகிறார்.

நடிகர் சூரி  நடிப்பில் 'விடுதலை - பாகம் 2' மற்றும் 'கொட்டுக்காளி' படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

இந்த நிலையில் 'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை' படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார்.

இப்படத்தில் சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.