2017ஆம் ஆண்டு அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்தப்படம் தமிழ், ஹிந்தியில் ரீமெக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழில் துருவ் விக்ரம் இந்தப் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இயக்குநரின் புதிய படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் பெயர் ‘அனிமல்’ என பெயரிடப்பட்டுள்ளது. கொடூரமான விலங்கு போல ரன்பீர் ரத்தம் வடிய கையில் சுத்தியலுடன் சிகரெட் பிடிக்கும் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியாகியது.
இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். கீதாஞ்சலி எனும் கதாபாத்திரத்தில் ந்டித்துள்ளார் ராஷ்மிகா. இயக்குநரின் சொந்த தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - அமித் ராய். சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் மாஸ்டராக கலக்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: நாயகியாக அறிமுகமானார் சல்மான் கானின் தங்கை மகள்!
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள் வெளியாக இருந்த நிலையில் டிச.1ஆம் தேதி வெளியாகுமென இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: சுந்தீப் கிஷன்- சிவி குமார் கூட்டணியில் மாயவன் 2!
படத்தின் டீசர் செப்.28ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டீசர் 2 நிமிடங்கள் 29 நொடிகள் இருக்குமெனவும் யு/ஏ தணிக்குழு சான்றிதழையும் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


