அனிமல் படத்தின் டீசர் வெளியானது!

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அனிமல் படத்தின் டீசர் வெளியானது!
Updated on
1 min read

ரன்பீர் கபூர் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா அனிமல் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - அமித் ராய்.

தந்தை மகனுக்கு இடையேயான உறவை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடித்துள்ளனர்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் பான் இந்தியப் படமாக உலகம் முழுவதும் டிச.1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அனிமல் படத்தின் டீசரை 5 மொழிகளிலும் படக்குழுவினர் இன்று காலை வெளியிட்டுள்ளனர்.

ரத்தமும், சண்டையும் நிறைந்த அனிமல் படத்தின் டீசர், இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com