
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. தற்போது கமல் இந்தியன் 2 படத்தின் பிஸியாக நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: சிம்புவின் கரோனா குமார் படத்தின் புதிய அப்டேட் !
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிந்தியில் பிரபலமான நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் ஆதரவினை பெற்றவர். நேர் கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதையும் படிக்க: என்னால் முடியாது; ஆனால் பாலய்யா செய்தால் மக்கள் நம்புவார்கள்: நடிகர் ரஜினிகாந்த்
முதலில் நடிகை நயன்தாரவை நடிக்க வைக்க திட்டமிட்டதாகவும் பின்னர் அவர் ஒத்துக்கொள்ளாததால் வித்யா பாலனை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...