

பிரபல இயக்குநர் படத்தில் நடிப்பதற்காக நடிகர்கள் விஜய், ஷாருக்கான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்கிற புதிய படத்தில் விஜய் நடித்து வருகிறார்.
அதேபோல், நீண்ட நாள்களுக்குப் பின் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படமும் ரூ.900 கோடி வசூலித்து பாலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் மிகப்பிரம்மாண்டமான படத்தில் நடிக்க விஜய் மற்றும் ஷாருக்கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நெட்பிளிக்ஸை ஆக்கிரமித்த ‘துணிவு’
தற்போது, ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தையும் ராம்சரணை வைத்து ‘ராம்சரண் 15’ படத்தையும் இயக்கி வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் தண்ணீரை மையமாக வைத்து சைன்ஸ் பிக்சன் படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
ரூ.1000 கோடியில் உருவாகும் இப்படத்தில் நாயகர்களாக விஜய்யும் ஷாருக்கானும் நடித்தால் இந்திய அளவில் பல வசூல் சாதனைகளைச் செய்யலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.