பழனி மலைக்கோயிலில் சமந்தா வேண்டுதல்

உடல் நலம் பெற நடிகை சமந்தா பழனி மலைக்கோயில் படிகளில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
பழனி மலைக்கோயிலில் சமந்தா வேண்டுதல்
Published on
Updated on
1 min read

உடல் நலம் பெற நடிகை சமந்தா பழனி மலைக்கோயில் படிகளில் ஏறி வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த சில படங்களிலிருந்து விலகியதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதனை சமந்தா தரப்பு மறுத்திருந்தது.

அவர் நடிப்பில் உருவான ‘சாகுந்தலம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், தன் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சமந்தா பழனி மலைக்கோயிலில் 600 படிகளில் சூடம் ஏற்றியபடியே முருகனை தரிசித்து வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com