/

‘தங்கலான்’ படத்தில் இணைந்த ஆங்கில நடிகர்! 

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் ஆங்கில நடிகர் இணைந்துள்ளார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2023, 2:40 pm

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

Story image

படத்தின் படப்பிடிப்பு தற்போது கே.ஜி.எஃப்பில் நடைபெற்று வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் ஆங்கில நடிகர் டேனியல் கால்டகிரோன் இணைந்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற ’தி பியானோ’ திரைப்படத்தில் நடித்தவர். 

Story image

நடிகர் விகரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரை அறிமுகப்படுத்தியுள்ளார். வேட்டைக்காரனை தங்கலான் படப்பிடிப்பிற்கும் சமூக வலைதளத்திற்கும் வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

Related Article

‘தனுஷ் 50’ படத்திற்கு இசையமைப்பாளர் இவரா?

பிருத்விராஜின் ‘கடுவா’ தமிழில் வெளியீடு!

‘சித்தார்த்-அதிதி ராவ் காதலிப்பது உறுதியா?’- இருவரும் ஜோடியாக சுற்றுவதால் ரசிகர்கள் கேள்வி!

நடிகை ஆலியா பட்டின் புதிய நண்பர் யார் தெரியுமா?

'குழந்தைகளிடம் பேசுவதில் வல்லவர் சிவகார்த்திகேயன்...': வைரலாகும் விடியோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.