மித்ரன் ஜவஹரின் ‘அரியவன்’ டிரைலர் வெளியீடு

திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
மித்ரன் ஜவஹரின் ‘அரியவன்’ டிரைலர் வெளியீடு

திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

‘யாரடி நீ மோகினி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு இசை - அனிருத்.  

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹரின் புதிய படமான ‘அரியவன்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அறிமுக நாயகன் ஈஷான் நடிக்கும் இந்தப் படத்தின் கதையை மாரிசெல்வன் எழுதியுள்ளார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com