
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் 2 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ், சரத் குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: கொதித்தெழுந்த அஷீம்: ‘டிக்கெட் டூ ஃபைனல்’ கைப்பற்றப்போவது யார்?
படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ராஷ்மிகா மந்தனா, ஷாம் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் 11 லட்சம் லைக்குகளையும் பெற்று சாதனை படைத்திருந்தது. தற்போது, யூடியூப்பில் வெளியான 20 மணி நேரத்தில் 2.1 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது.
இப்படம் ஜன.11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.