
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: ‘கண்ணீர் விலை மதிக்க முடியாதது’ - வாரிசு படம் பார்த்து அழுத இசையமைப்பாளர்!
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது.
துணிவு படத்தின் டிரைலர் 59 மில்லியன் (5.9 கோடி) பார்வைகளைக் கடந்து அசத்தி வருகிறது. மேலும் திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
மலேசியாவில் 126 சினிமா திரையரங்குகளில் 970 திரைகளில் வெளியாக உள்ளதை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.