தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சாய்பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருகென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் அவருக்கு மலையாளத்திலும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஊட்டியில் தனது குடும்பத்துடன் படுகா மக்களின் பாரம்பரிய உடையணிந்து ஹிதாய் ஹப்பா திருவிழாவில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களில் சாய்பல்லவியின் தங்கை பூஜா, தம்பி ஜித்துவும் காணப்படுகிறார்கள்.
வித்தியாசமான முறையில் சாய்பல்லவி அணிந்துள்ள இந்த உடைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.