
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தை கனடா மேயர் பாராட்டியுள்ளார்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜன.11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகளவில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இதுவரை ரூ.270 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: பிரபல இளம் நடிகர் தற்கொலை
இந்நிலையில், கனடாவின் பர்லிங்டன் நகர மேயர் மரியன் மீட்வார்ட், கனடாவில் ரத்ததானம், முகாம், உணவு வழங்குதல் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களை செய்துவரும் விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டி காணொலி வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.