தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ரவி தேஜா. சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற வீர சிம்ஹ ரெட்டி படத்தி இயக்குநர் கோபிசந்த் மலினேனி ரவிதேஜாவுடன் 4வது முறையாக இணைந்துள்ளார். 2008, 2013, 2021 முறையே டான் சீனு, பலுபு, க்ராக் ஆகிய வெற்றிப் படங்களில் இந்த ஜோடி இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜவான் முன்னோட்ட விடியோ எப்போது?: படக்குழு அறிவிப்பு!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார் என படக்குழு தெரிவித்துள்ளது. மற்ற விவரங்களை விரைவில் வெளியிட உள்ளதாக இருக்கிறது.
ரவிதேஜாவின் கடைசியாக வெளிவந்த தமாகா, வால்டர் வீரய்யா படங்கள் நல்ல வரவேற்பினை பெற்றது. ஆனால் ராவணசுரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து ‘ஈகிள்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹாட்ரிக் மாஸ் வெற்றிக் கூட்டணி திரும்பவும் இணைந்ததில் ரவி தேஜா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








