நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படம் 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமந்தா, எமி ஜாக்ஸன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 68 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக்கானை வைத்தி ஹிந்தியில் அட்லி இயக்கியுள்ள ஜவான் படம் முடிவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: சர்வதேச தரத்தில் ஜவான்: அட்லியை பாராட்டிய விக்னேஷ் சிவன்!
தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை அட்லி இயக்கவில்லை. நடிகர் ஜீவா நடித்த ‘கீ’ படத்தினை இயக்கிய காலீஸ் இயக்க உள்ளதாகவும் அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முராட் கேதனி உடன் அட்லி இணைந்து தயாரிக்க உள்ளார். ஏற்கனவே தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
வருண் தவானின் 18வது படம் என்பதால் தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘விடி18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


