ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா?

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு இவ்வளவா?
Published on
Updated on
1 min read

நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலக அழகி பட்டத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். தமிழில் இயக்குநர் மணிரத்னம், இருவர் படத்தின் மூலம் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன், பொன்னியின் செல்வன் என பல படங்களில் நடித்துள்ளார். 

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகளும் உள்ளார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராயின் மொத்த சொத்தின் மதிப்பு ரூ.774 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் மும்பையில் அவர் வசித்துவரும் பங்களாவின் மதிப்பு ரூ.112 கோடி என்றும் அதுபோக மும்பையில் மேலும் சில வீடுகளை அவர் வைத்துள்ளதாகவும் தகவல். 

ஒரு படத்திற்கு ரூ.10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்கும் ஐஸ்வர்யா ராய் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், தொழில் என முதலீடும் செய்துள்ளார். மேலும், கோடிக்கணக்கில் மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ஏ8 போன்ற சில ஆடம்பர கார்களையும் வைத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com