எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜிகர்தண்டா - 2 வெற்றியைக் கொண்டாடிய படக்குழு!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

News image
Updated On :17 நவம்பர் 2023, 11:57 am

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளி வெளியீடாக கடந்த நவ.10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, இளவரசு, நிமிஷா சஜயன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் கேங்க்ஸ்டர் சீசரும் (ராகவா லாரன்ஸ்) இயக்குநராக அறிமுகமாகும் கிருபாவும் (எஸ்.ஜே.சூர்யா) எதிர்கொள்ளும் பிரச்னைகளாக உருவாகியிருக்கிறது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாரான ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி வெளியீட்டாக வந்தன. இதனால், 4 ஆண்டுகள் கழித்து கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரையரங்க வெளியீடாக வந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். 

படமும் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், ஜப்பான் படத்தின் கடும் தோல்வியால் இப்படத்தின் முதல்நாள் வசூலை விட அடுத்தடுத்த நாள்களின் வசூல் அதிகரித்தன.

இப்படம் வரவேற்பைப் பெற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மேலும் 100 திரைகளில் படத்தை வெளியிட்டுள்ளனர்.

Story image

இந்நிலையில், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றதால் படக்குழுவினர் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.