/

அசோக் செல்வனின் சபா நாயகன்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:26 am

DIN

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கல் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

Story image

தற்போது சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், சபாநாயகன் படம் வரும் டிச.15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.