/

கார்த்தியின் 26வது படத்தில் கீர்த்தி ஷெட்டி!

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:36 am IST

‘ஜிப்ஸி’ படத்துக்குப் பிறகு ராஜு முருகன் இயக்கி வரும் படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடிக்கின்றனர். இது கார்த்தியின் 25வது படமெ என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

Story image

இதற்கடுத்து கார்த்தி தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். நலன் குமாரசாமி இயக்கும் பெயரிடப்படாத இந்தப்படத்தின் 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் இதில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Story image

மேலும் இதில் நடிகர் சத்யராஜ் வில்லனாக கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ளார். தம்பி, கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு நடிகர் சத்யராஜுடன் கார்த்தி இணைந்து நடிக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

இந்தப் படத்தில் கார்த்தி எம்ஜிஆர் ரசிகனாக நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.