மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவானப் படம் தனி ஒருவன். கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
மேலும், இப்படத்தில் ஹரிஷ் உத்தமன், கனேஷ் வெங்கட் ராமன், தம்பி ராமையா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்த இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
சமீபத்தில், தனி ஒருவன் படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதில் நாயகனாக ஜெயம் ரவியும் நாயகியாக நயன்தாராவும் நடிக்க உள்ளனர். மோகன் ராஜாவே இயக்குகிறார்.
இதையும் படிக்க: சக கலைஞராக ஏ.ஆர்.ரஹ்மானுடன் துணை நிற்கிறேன்: யுவன்
இந்நிலையில், இப்படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடிக்க நடிகர் ஃபஹத் ஃபாசிலிடம் படக்குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவுக்குள் மிகப்பெரிய வினாத்தாள் மோசடி கும்பல் செயல்படுகிறது: சஞ்சய் ராவத்!

தலைவரான தனுஷ்! குழப்பத்தில் ரசிகர்கள்!
பஞ்சாப் வினாத்தாள் கசிவு! அமைச்சரை ராஜிநாமா செய்யக் கோரி பாஜக எம்பிக்கள் போராட்டம்!

பட்டமளிப்பு விழாவில் கண்ணீர் விட்டு அழுத மாணவர்களால் பரபரப்பு!
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


