திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இவர்கள் எங்கள் வாழ்க்கையின் ஆசிர்வாதம்: விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தன் குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி உருக்கமாகக் பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 6:21 am

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ள இறைவன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. மேலும், பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Story image

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று பெற்றோர்களாகவும் இருக்கின்றனர். 

Story image

மேலும், குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடாமல் தவிர்த்து வந்தனர். சமீபத்தில் நயன்தாரா இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அதில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடல் வரிகளுடன்  ‘நான் வந்துட்டேன்னு சொல்லு..’ எனப் பதிவிட்டு மகன்களான உயிர், உலக் ஆகியோரின் முகங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன்களின் புகைப்படங்களை பதிவேற்றி, “எங்கள் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம் உயிரும் உலக்கும்தான்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.