நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘படம் பிடிக்கவில்லையென்றால் செருப்பால் அடிங்க..’ ஹாட்ஸ்பாட் இயக்குநர் வேதனை!

ஹாட்ஸ்பாட் படத்தின் வரவேற்பு குறித்து வேதனையாகப் பேசியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

News image
Updated On :2 ஏப்ரல் 2024, 3:56 pm IST

திட்டம் இரண்டு, அடியே படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.

சமீபத்தில், இவர் இயக்கிய ஹாட்ஸ்பாட் திரைப்படம் திரைக்கு வந்தது. ஆண் - பெண் உறவு மற்றும் சமூகப் பிரச்னையை மையமாகக் கொண்டு உருவான இதில் கலையரசன், சாண்டி மாஸ்டர், கவுரி கிஷன், ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், சுபாஷ், சோபியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகவும் நல்ல பெயரைப் பெற்றது. ஆனால், போதிய திரையரங்கம் மற்றும் ரசிகர்களின் ஆதரவு இல்லாததால் வசூலில் திணறி வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “படம் பார்த்தவர்கள் நன்றாக ரசித்துப் பார்த்தனர். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மலையாளப் படத்திற்கு அவ்வளவு ஆதரவு தருகிறீர்கள். நாங்கள், உண்மையிலேயே நல்ல படம்தான் எடுத்திருக்கிறோம். நம்பிக்கையுடன் சொல்கிறேன், இப்படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். பிடிக்கவில்லையென்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள்.” என வேதனையுடன் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.